இரண்டு வாரங்களுக்கும் மேல் பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. கோவையில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு குழந்தை மீது அதிக கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது. குழந்தையை தினமும் ஸ்கூலுக்கு அனுப்பும் போது கூடவே இருந்து கூட்டிக்கொண்டு வர வேண்டிய கட்டாயம். அதை எத்தனை நாள் தொடர முடியும்?
வேன் டிரைவரிலிருந்து அவருக்கு உதவியாக இருக்கும் ஆள் வரை அனைவர் மீதும் ஒரு சந்தேகப்பார்வையுடன் தான் இருக்க வேண்டியதிருக்கிறது. யாராவது குழந்தையுடன் சிரித்துப் பேசினால் கூட இவன் எப்படிப்பட்டவனாக இருப்பானோ என்ற பயம் என்னையுமறியாமல் தொற்றிக்கொள்கிறது. இந்த பயம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் எல்லாப் பெற்றோர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அவள் படிக்கிறாளோ இல்லையோ பாதுகாப்பாக வீட்டுக்கு வந்தால் போதும் என்கிற மனநிலையில் தான் இருக்கிறார்கள்.
கோவையில் நடந்தக் கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு, அனைவரது மனதிலும் ஆவேசங்களும், வருத்தங்களும் இருந்தது. அந்த ஆவேசங்களும், வருத்தங்களும் ஒரு என்கவுன்ட்டரில் முடிந்து விட்டது. ஆனால் குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது நம் நாட்டில்? ஒரு என்கவுன்ட்டரினால் மட்டுமே குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் முடிந்து விடுமா?
எல்லாத் தவறுகளையும் சுதந்திரமாக செய்ய முடிகிற வெளிநாட்டில் கூட குழந்தைகள் மீது கை வைத்தால் அதற்கானத் தண்டனை மிகக்கொடூரமாகத்தான் இருக்கிறது. ஆனால் சின்னஞ்சிறு பட்டாம்பூச்சிகளாய் சுற்றித்திரியும் நம் குழந்தைகள் பாதுகாப்பில்லாத ஒரு உலகத்தில் தான் வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும் போது கோபப்படாமல் இருக்க முடியவில்லை.
குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்கக் கடுமையானச் சட்டம் கொண்டுவராத வரை, பெற்றோர்கள் மனதில் உள்ள பயம் நீங்கப்போவதில்லை.
இத்தனைப் பிரச்சினைகள் நாட்டில் தலைவிரித்தாடும் போது, இரண்டு கிரவுண்டு நிலம் வழங்குவதற்காக சட்டசபையில் வாதிடுவோருக்கு முதலில் ஒரு என்கவுன்ட்டர் நடத்தினால் நாடு உருப்படும்.
Sunday, 14 November 2010
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
நல்ல போஸ்ட் அகிலா..உங்கள் உணர்வுகளை புரிந்துக்கொள்ளமுடிகிறது.
தமிழ்மணத்தில் இணைக்கலையா?
//குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்கக் கடுமையானச் சட்டம் கொண்டுவராத வரை, பெற்றோர்கள் மனதில் உள்ள பயம் நீங்கப்போவதில்லை. //
மிகச் சரியாய் சொன்னீர்கள் சகோ..
//சட்டசபையில் வாதிடுவோருக்கு முதலில் ஒரு என்கவுன்ட்டர் நடத்தினால் நாடு உருப்படும்.//
அந்த நாளும் வந்திடாதோ. :(
எல்லாம் இனி நம் கையில் தான் உள்ளது
உணமையான ஆதங்கம் சகோதரி....
உணர்வு பூர்வமான பதிவு
நம்ம நாட்டில் உயிருக்கு மதிப்பில்லை.
நல்ல உணர்வுப்பூர்வமான பதிவுங்க.
உங்களின் ஆதங்கமும், நியாயமான பயமும் புரிகிறது.
//அந்த ஆவேசங்களும், வருத்தங்களும் ஒரு என்கவுன்ட்டரில் முடிந்து விட்டது. ஆனால் குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது நம் நாட்டில்? ஒரு என்கவுன்ட்டரினால் மட்டுமே குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் முடிந்து விடுமா?//
ஓவொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. உங்கள் கேள்வியின் அடிப்படையிலேயே சற்றே உள்ளே சென்று குழந்தைகளுக்கான சட்டம் எங்கே என்று கேட்டு ஒரு பதிவு பாருங்க நேரமிருந்தா... பிள்ளைகளுக்கான பாலியல் உபத்திரமும், நம்மூர்ச் சட்டமும்...
நல்ல பதிவு.
என்ன செய்கிறது நம்ம எவ்வளவு தான் ஜாக்கிரதையா இருந்தாலும் மிருகங்கலை கண்டுபிடிப்பது சிரமமாகவே உள்ளது.
என்கண்டர் பண்ணது நல்ல விசயம் தான் அரிசியை கடத்துங்கள்
மணலை கடத்துங்கள்
எதை வேண்டும் என்றாலும் கடத்துங்கள்
ஆனால் எங்கள் குழந்தைகளை கடதாதீர்கள்
:பார்த்திபன்
நன்றி சந்தனமுல்லை!
நன்றி பாலாஜி!
நன்றி தொப்பிதொப்பி!
நன்றி ஜெயந்த்!
நன்றி எஸ். மகராஜன்!
நன்றி தமிழ் உதயம்!
நன்றி அன்பரசன்!
//Thekkikattan|தெகா said...
.. பிள்ளைகளுக்கான பாலியல் உபத்திரமும், நம்மூர்ச் சட்டமும்...//
தகவலுக்கு நன்றிங்க!
நன்றி ராஜவம்சம்!
நன்றி செளந்தர்! (பார்த்திபன்)
சரியாக சொன்னீர்கள். இதைப் பற்றி என் நண்பருடன் நடந்த விவாத்தை என் பதிவில் பாருங்கள். http://chozhan2009.blogspot.com/2010/11/blog-post_16.html
good post..
பாதுகாப்பாற்ற சூழலில் எவர் மீதும் சந்தேகம் வருவது தவிர்க்க முடியாமல் போகிறது. நல்ல பதிவு.
நல்ல பதிவு..தொடருங்கள்..
நல்லதோர் இடுகை அகிலா..
Good Post Akila..
http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_19.html
கடைசி வரிகளுக்கு சாமக்கோடங்கியின் முழு ஆதரவு..
Post a Comment