நம்ம ஊர் அரசியலைப் பொறுத்தவரை, ஒரே குடும்பத்தில் உள்ள அண்ணன், தம்பி வேறு வேறு கட்சியில் இருந்தால் அதுவே குடும்பத்துக்குள் சண்டையாக மாறி அடிதடியில் முடிந்துவிடும் அளவுக்குப் போய்விடும்.
நம்ம ஊர் அரசியல் இப்படிப்பட்ட நிலையில் தான் இருக்கிறது.
ஆனால் இங்கிலாந்தில் எப்படித் தெரியுமா?
அங்கே ஒரே மேடையில் போட்டியிடுகிற இரு வேட்பாளர்களும் பேசுவார்களாம், பட்டிமன்றம் மாதிரி.
ஒருமுறை இது போன்ற ஒரு கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு வேட்பாளர் மக்கள் தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கானக் காரணங்களை வரிசையாகச் சொல்லி, "ஆகவே எனக்கு வாக்களியுங்கள்" என்ற வேண்டுகோளோடு பேச்சை முடித்துக் கொண்டு தன் இருக்கைக்கு சென்றுவிட்டார்.
அதுவரை போட்டி வேட்பாளர் அங்கு வந்து சேரவில்லை. மக்களோடு முதலில் பேசிய வேட்பாளரும் காத்திருந்தார். அவர் வந்து சேர தாமதமாகியதால் முதலில் பேசியவர் ஒலிவாங்கியின் முன் வந்து நின்று பேச ஆரம்பித்தார். எப்படித் தெரியுமா?
"என்னை எதிர்த்துப் போட்டியிடுகிற வேட்பாளர் ஏனோ இன்னமும் வந்து சேரவில்லை. அதன் காரணமாக அவர் தனக்காக ஓட்டு கேட்கும் வாய்ப்பை இழந்து நிற்கிறார். அதனால் அவர் சார்பாக நான் பேச விரும்புகிறேன். அவர் தரப்பு நியாயங்களையும் நானே சொல்கிறேன்" என்று தொடங்கி.. எதிர்தரப்பு வேட்பாளருக்காகவும் இவரே பேசி முடித்திருக்கிறார்.
தேர்தல் பண்பாடு என்பது இப்படித்தானே இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, அங்கு ஓட்டுக் கேட்கும்போதே வெற்றியா? தோல்வியா? என்பதைக் கணித்துவிட முடியுமாம்.
ஒரு வேட்பாளர் வீட்டுக்கு முன்னால் நின்று, "எனக்கு ஓட்டுப் போடுங்கள்" என்று கேட்டால் "அதுக்கென்ன..பார்த்துச் செய்யறோம்" என்று வாசலிலேயே அனுப்பி வைத்து விடுவார்களாம். இப்படி வாசலிலேயே அனுப்பி வைப்பவர்களின் ஓட்டு நிச்சயம்.
வேறு சில வீடுகளில் வேட்பாளரை வீட்டுக்குள்ளே கூப்பிட்டு உட்கார வைத்து காபி கொடுத்து அனுப்புவார்களாம். இந்த ஓட்டு நிச்சயமில்லாததாம். இந்த உபசரிப்பு, ஓட்டுப்போட போவதில்லை..இதையாவது செய்வோம் என்ற அனுதாபத்தில் தான் அப்படி நடந்து கொள்வார்களாம்.
தேர்தல் பண்பாடு என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்.
(செய்திகள்: தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய 'சிறகை விரிப்போம்!' எனும் நூலிலிருந்து)
நம்ம ஊர் அரசியல் நிலவரத்தையும் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் அய்யோ..யோசிக்கவே முடியவில்லை. நம் ஊரில் ஓட்டுக் கேட்கும் விதமே தனிதான். நம்ம ஊர் அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எந்த அளவுக்கு இரங்கிப் போகிறார்கள். அரசியல் ஒரு சாக்கடை என்பது உண்மைதானோ!
இங்கே அரசியல் திருடர்களில் கொஞ்சமாகத் திருடுபவன் யாரோ? என்று தேடும் நிலையில் இருக்கிறார்கள் மக்கள்.
போர் நிறுத்தமும் காசாவின் தற்போதைய நிலையும்
4 hours ago
11 comments:
வேறு வழி யாருக்காவது ஓட்டு போட்டு தானே ஆக வேண்டி உள்ளது. கள்வர்களிலும் "உள்ளம் கவர்ந்த கள்வன்" கள் இருப்பார்களே. அவர்களுக்கு ஓட்டு போட்டு விடுவோம். நல்ல பதிவு.
அரசியல் ஒரு சாக்கடை என்பது உண்மைதானோ!
.....இப்படி வெள்ளந்தியாய் கேள்வி கேட்கிறீங்களே .... ஆஹா...
vakkalippathu urimai enpathal sakkadaiyil sirikkum puzhukkalukku podaththaney vendiyullathu. sakkadaiyil koovamaga illamal siriya sakkadaiyaga parththu poduvom. veru enna seivathu.
இங்கே அரசியல் திருடர்களில் கொஞ்சமாகத் திருடுபவன் யாரோ? என்று தேடும் நிலையில் இருக்கிறார்கள் மக்கள்.
உண்மையை சொன்னீர்கள் கள்ளனுக்குள் நல்ல கள்ளனை தெரிவு செய்தல் அரசியல்
அரசியலை குறைசொல்வதை ஒரு பேசனாக வைத்து இருக்கங்க.. உங்களையும் சேர்த்து தாங்க சொல்லுறென்...
இது சரின்னு 3 பேர் பின் பாட்டு வேற...
நல்லா யோசிச்சு சொல்லுங்க... இது வரை நடந்த தேர்தல்ல எத்தனை தேர்தலில் தவறாம நீங்க ஒட்டு போட்டு இருக்கிங்க ?
இப்படி கேட்டா இருக்கிரவங்க எல்லாம் மோசம் அதன்னல போடலைன்னு சொல்வீங்க , அவங்க ஏன் மோசமா இருக்கங்க ?
நேத்து வரை நம்ம எதிர் வீட்டில பக்கத்து தெருவில இருந்தவங்க தானே இப்போ பதவியில் இருக்கங்க ?
அரசியல்ல இருக்கிறாவங்களோட வீடு கடை, நிறுவங்கள்ள வேலை செய்யுரவங்க ஒழுங்கா இல்லைன்ன வேலைக்கு வச்சு இருப்பங்களா ?
ஆனா அவங்க மட்டும் அப்படி இல்லையே ஏன் ? ஏன்னா அரசியல்ல இருக்கிறவங்க தங்களுக்கு கீழ இருக்கிரவங்க சரியா இருக்காங்களான்னு கண்காணிக்கறங்க ...
சரியில்லைன்னா உடனே டிஸ்மிஸ்தான்.
அரசியல்வாதி யாரானாலும் அவங்க நமக்கு (பொது மக்களுக்கு) சேவகர்கள் தான்.
அவங்க சரியான்னு நாம் யாரும் கண்காணிக்கிறது இல்லை.
ரேசன் கார்டு கொடுகிறாங்க , டீவி கொடுக்கிறங்ன்ன எல்லாரும் போய் கியுவில் நிக்கரோம் ஆன தேர்தல்ல அதிக பட்ச வாக்கு பதிவே 65% தான் இது கள்ள வாக்கையும் கட்சி அனுதாப வாக்கையும் சேர்த்து..
அப்பொ சிந்திச்சு ஓட்டு போடுறங்க எத்தனை பேர்ன்னு பாருங்க..
ஒரு பழமொழி இருக்கு தெரியுமா?
உடையவன் பாராத பயிர் ஒரு முழம் கட்டைன்னு ...
மக்களட்சியில் மக்களாகிய நாம் கண்காணிக்கனும் , அத நாம் செய்யல.. அதன் விளைவுதான் சாக்கடை.
இதில் முதல் மட்டுமல்ல முழு தவறும் மக்களிடம் உள்ளது...
அதிலும் குறிப்பாக மக்கள் தொகையில் 50% இருக்கும் பெண்களகிய உங்களிடம் உள்ளது..
ஒரு புடவை, நகை , பிரிட்ஜ் வாசிங் மிசின்னு தேவயான பொருள் வாஙக எத்தனை விசாரணை எத்தனை திட்டமிடும் பெண்கள்.. தங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி 1% தெரிந்து வைத்து இருந்தால் ஆச்சரியம் தான்.
தேவையான பொருள் வாங்க வீட்டில கையாளூம் உத்தியை , வீட்டில் எல்லோரும் ஓட்டு போடனும்ன்னு கையாண்டா, 100% வாக்கு பதிவும் நிச்சயம்.
பெண்களுக்கு இதை செய்ய மனம் இருக்கா?
சொல்லுங்க...
இப்பவும் அதை எல்லாம் சரி செய்ய முடியும்..
வரும் தேர்தலில் இலவசம் தந்த , தருவதாய் வாக்களிக்கும் எந்த கட்சிக்கும் ஓட்டு போடாம சுயேட்சைகளை ஜெயிக்க வச்ச...
1-2 வருசம் குழப்பம் இருக்கும் அப்புரம் சரியா போய்டும் சரியாக போய்தான் ஆகணும்..
பார்க.. http://thoppithoppi.blogspot.com/2011/01/blog-post_18.html
இன்னுரு விஷயம்...
//நம்ம ஊர் அரசியலைப் பொறுத்தவரை, ஒரே குடும்பத்தில் உள்ள அண்ணன், தம்பி வேறு வேறு கட்சியில் இருந்தால் அதுவே குடும்பத்துக்குள் சண்டையாக மாறி அடிதடியில் முடிந்துவிடும் அளவுக்குப் போய்விடும்.//
நிஜத்துல ஒரெ குடும்பத்தில் உள்ளவஙக வேறு வேறு கட்சியிலதான் இருப்பங்க...
எங்க ஊர் பக்கதுல ஒரே குடும்பத்தில் அப்பா ஒரு கட்சி ஒன்றிய செயலர். ஆன மகன் வேறு கட்சியில சேர்ந்தார்.
நீங்க சொன்னமாதிரி விட்டுல தினமும் பிரச்சனை தான். சாப்பிடும் போது யாராவது ஏதாவது சொல்வாங்க, அந்த கட்சி சரி, இந்த கட்சி சரியில்லைனு கடைசில சாப்பிடாம போய்டுவாங்க..
நானும் இது நீஜம்ன்னு நினைச்சேன்.
அப்புறம் பார்த்தாதன் தெரியுது...
அவங்க சம்மந்தி ஒரு கட்சி, மச்சினன் ஒரு கட்சின்னு இருக்கங்க...
வீட்டுல சம்சாரம் குவாரி பிஸ்னஸ், கொழுந்தியா லாரி பிஸ்னஸ்ன்னு...
நிறைய பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிற,,
கொள்ளை லாபம் தரும் தொழில்ல இருக்கங்க...
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவங்க தொழில் , வருமானத்த்க்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏமாறுவது மட்டும் தான் மக்கள் வேலை....
பரபரப்ப பேசப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பதிச்ச பணத்தை என்ன பண்ணியிருக்கங்கன்னு பாருங்க http://vimarisanam.wordpress.com/2010/11/17/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/
இது நம் பணம், 1.75 லட்சம் கோடி நம் பணம். தனியார் கம்பனி லஞ்சம் மூலம் தலைவர்கள் வாங்கியிருக்கலாம். ஆனால்
தனியார் கம்பனிகள் பொருளின் விலையுடன் இந்த செலவை கூட்டி அதை நம்மிடம் தான் வசுலிப்பர்கள்... 1.75 கோடி கொள்ளை என்றல் மக்களில் ஒவ்வொறுவருக்கும் 40,000 களவு போனதாக அர்த்தம்.
நம்மிடம் 40,000 யாரவது கொள்ளையடித்தால் சும்மா இருப்பமா?
ஆனால் நம்மிடம் கொள்ளையடித்தை பற்றி டீக்கடையில் பேசி பொழுது போக்குகின்றனர் மக்கள்.
அப்படி நம்மை முளை சலவைசெய்துள்ளனர் தலைவர்கள் ... இப்பொது சொல்லுங்கள் ...
யார் பக்கம் தவறு... யாரால் அரசியல் சாக்கடையாகி உள்ளது...?
Very nice positive approach... Let our politicians try to emulate this habit in future... :-)
Visit to my Blog :
http://anubhudhi.blogspot.com/
வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
no comment on politics...
Post a Comment