Tuesday, 1 March 2011

நாளை உங்கள் பெண்ணும் இந்தக் கேள்வியைக் கேட்கலாம்!


மகள்: "அம்மா, என்னம்மா இவ்வளவு பாத்திரங்கள்.. எதுக்கும்மா இதெல்லாம்?"


அம்மா: "இந்த பாத்திரங்களெல்லாம் உனக்கு சீர் செய்யத்தான்.."


மகள் அத்தனை பாத்திரங்களையும் கலைத்துப் பார்த்தாள்..


மகள்: "இதென்னம்மா.. தோசைக்கல் கூட வைத்திருக்காயே.."


அம்மா: "ஆமாம். உன் புருஷனுக்கு தோசை செஞ்சு கொடுக்க வேண்டாமா?"


மகள்: "அப்படின்னா அவரால தோசைக்கல் கூட வாங்க முடியாதாம்மா?"


அம்மா: "அப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா.. இதெல்லாம் காலம், காலமாக நடக்கும் சம்பிரதாயம்"


மகள்: "ம்ம்.. சரிம்மா..இந்தப் பாத்திரங்களையெல்லாம் வைத்து நான் என்ன செய்ய?"


அம்மா: "என்னடி கேள்வி இது? உன் புகுந்த வீட்டில் வைத்து சமைப்பதற்கு பாத்திரங்கள் வேண்டாமா? அதற்குத்தான்...."


மக‌ள்: "ஏன் அவர்கள் வீட்டில் பாத்திரங்கள் இருக்காதாம்மா?"


அம்மா: "இருக்கும். இருந்தாலும் உனக்கென்று தனியாக எல்லாம் வேண்டாமா?"


மகள்: "எல்லாத்தையும் இப்போதே அவர்களும் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள், நீங்களும் தனியாக எனக்கென்று அத்தனையும் ஒதுக்கி விடுகிறீர்கள். அப்புறம் ஏன் கல்யாணத்துக்கப்புறம் என் மகனை மயக்கி தனியாக கூட்டிச்சென்று விட்டாள் என்று எல்லாரும் சொல்கிறார்கள் அம்மா? பக்கத்து வீட்டுல இருக்கிற ஜானகி அக்கா அழுதப்போ பாவமா இருந்துச்சும்மா..."


அம்மா: "!....!" 

29 comments:

Unknown said...

அதானெ... அதெப்படி அப்படி பேசலாம்?

தமிழ் உதயம் said...

பெண்ணின் மனம் பெண்ணுக்கே புரியவில்லையா. ஆனால் அருமையாக எழுதி உள்ளீர்கள்.

Yaathoramani.blogspot.com said...

பின்னால் குண்டு இருப்பது தெரியாமல்
திரியில் தீ வைத்தவனைப் போல
ஏதோ நகைச்சுவைப் பதிவு என நினத்து
சாதாரணமாக படிக்கத் துவங்கினேன்
கடைசியில் வைத்துள்ள
ஆப்பின் பாதிப்பில் இருந்து
வெளியேற வெகு நேரம் ஆனது
நல்ல பதிவுதொடர வாழ்த்துக்கள்

Chitra said...

கேள்வி நல்லா இருக்கே! Smart girl!

சாந்தி மாரியப்பன் said...

சில புதிர்கள் என்னிக்குமே புரியறதில்லை..

Nagasubramanian said...

நியாயம் தான்

S Maharajan said...

அருமையாக எழுதி உள்ளீர்கள்

Unknown said...

நியாயமான கேள்வி தானே...

'பரிவை' சே.குமார் said...

அருமையாக எழுதி உள்ளீர்கள்...

மாணவன் said...

//"எல்லாத்தையும் இப்போதே அவர்களும் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள், நீங்களும் தனியாக எனக்கென்று அத்தனையும் ஒதுக்கி விடுகிறீர்கள். அப்புறம் ஏன் கல்யாணத்துக்கப்புறம் என் மகனை மயக்கி தனியாக கூட்டிச்சென்று விட்டாள் என்று எல்லாரும் சொல்கிறார்கள் அம்மா? பக்கத்து வீட்டுல இருக்கிற ஜானகி அக்கா அழுதப்போ பாவமா இருந்துச்சும்மா..."//

என்றுதான் இந்த நிலைமை மாறும் என்றும் தெரியவில்லை...

நல்லா சொல்லியிருக்கீங்க சகோ...

ஹேமா said...

ம்...பெற்றவர்கள் ஆசையாய்ச் செய்வது பிறகு பிரச்சனையாய்ப் போய்விடுகிறது.சீதனம்கூட இப்பிடித்தான் பெற்றவர்கள் ஆசையாய் செய்யப்போய் இப்போ முதிர்கன்னிகள் கண்ணீர் விடும் நிலைமையில் வந்திருக்கிறது.நல்லதொரு பதிவு அகிலா !

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. கேள்விகளைச் சரியாகத்தானே கேட்டிருக்கிறாள் மகள். பதில் சொல்லத்தான் அம்மாவிற்குத் தெரியவில்லை! பல குடும்பங்களில் இது போலத்தான் நடக்கிறது! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா said...

தங்கள் தளத்திற்கான என் முதல் வருகை அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு...

ம.தி.சுதா said...

இனி தொடர் வருகையை எதிர் பாருங்கள்...

தமிழ் அமுதன் said...

நன்றாய் உள்ளது பதிவு..!

jothi said...

க‌ல‌க்க‌ல் ப‌திவு,.. அவ‌ரால‌ தோசைக்க‌ல் வாங்க‌ முடியாத‌ம்மா?? ச‌வுக்கால் அடிப்ப‌து போல் ந‌ச் கேள்வி,..

Anonymous said...

மிகச் சரியாகத் தான் கேட்டிருக்கிறார்!

நிலாமதி said...

பொண்ணும் அவரது கேள்வியும் நியாயமானது .........

இருவர் said...

வரதட்சனை தொடரும் வரை தனிகுடும்பமும் தொடரும் ........
அதற்கு
உங்கள் பதிவு ஒரு எடுத்துக்காட்டு

இருவர் said...

வரதட்சனை தொடரும் வரை தனிகுடும்பமும் தொடரும்.......
அதற்கு உங்கள் பதிவு ஒரு எடுத்துக்காட்டு.

Sriakila said...

நன்றி வினோத்!

நன்றி தமிழ் உதயம்!

நன்றி ரமணி சார்!

நன்றி சித்ரா அக்கா!

நன்றி அமைதிச்சாரல்!

நன்றி எஸ். மகராஜன்!

நன்றி கலாநேசன்!

நன்றி குமார்!

நன்றி மாணவன்!

நன்றி ஹேமா!

நன்றி வெங்கட் நாகராஜ்!

நன்றி ம.தி.சுதா!

நன்றி தமிழ் அமுதன்!

நன்றி ஜோதி!

நன்றி பாலாஜி!

நன்றி நிலாமதி!

வருகைக்கு நன்றி இருவர்!

Pranavam Ravikumar said...

அருமை!

போளூர் தயாநிதி said...

நல்ல பகிர்வு. கேள்விகளைச் சரியாகத்தானே கேட்டிருக்கிறாள் மகள்.அவ‌ரால‌ தோசைக்க‌ல் வாங்க‌ முடியாத‌ம்மா?? ச‌வுக்கால் அடிப்ப‌து போல் ந‌ச் கேள்வி,..

Sriakila said...

Thanks!

Pranavam Ravikumar.

Polur Dayanidhi.

சிவகுமாரன் said...

பதில் சொல்ல முடியாத கேள்விகள் இவை

குறையொன்றுமில்லை. said...

உங்க பதிவு பார்த்ததும் எனக்கும் என்
கல்யானத்துக்கு கொடுத்த சீர் பாத்திரங்களை என்ன செய்யனும் என்று கேட்டதுதான் நினைவில் வந்தது,

raji said...

மிக சரியான கேள்விகள்.நல்ல பகிர்வு

தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்

கோவை நேரம் said...

நச்சுனு ஒரு கேள்வி .....அருமை ...

Sriakila said...

நன்றி சிவகுமாரன்!

நன்றி லஷ்மி அம்மா!

நன்றி ராஜி!
(எதற்கு மன்னிப்பெல்லாம் :))

வருகைக்கு நன்றி கோவை நேரம்!