Wednesday, 27 October 2010

தனிமையில் இளையராஜா

இந்த உலகத்திலேயே நீ வெறுக்கும் முதல் விஷயம் எது என்று யாராவது என்னிடம் கேட்டால் உடனே என்னிடமிருந்து வரும் வார்த்தை தனிமை என்பது தான்.

நான் அறிந்தவரை, தனிமை பலருக்கும் பிடித்தமான விஷயமாகத்தான் இருக்கிறது. தனிமையில் இருக்கும் போது தான் எனக்கு கவிதை எழுத வருகிறது, நிதானமாக யோசிக்க முடிகிறது என்றெல்லாம் பலபேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்கும் போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.



நான் தனிமையில் இருக்கும் போது என்றைக்கோ பார்த்த திகில் படங்களும், ஏதோ ஒரு நாளில் யாரிடமோ போட்ட சண்டையும் தான் நினைவுக்கு வரும். கூடவே வாழ்க்கையில் ஏற்படும் சலிப்புகளும் அதனால் ஏற்பட்ட சங்கடங்களும் கூட மனதைப்போட்டு அழுத்தும். என்னைப் பொறுத்தவரை, தனிமை மனதில் பாரத்தை மட்டும் தான்  கொடுக்கிறது,


நான் கொடுமையாக நினைக்கும் அந்தத் தனிமையில் கூட எனக்கு கேட்கப் பிடிக்கும் ஒரே விஷயம் இசை மட்டும் தான். அதுவும் இளையராஜாவின் பாடல்கள் என்றால் மனதில் ஏற்படும் ஒருவிதமான சுகம் இருக்கிறதே. ஆஹா! அதை வார்த்தையால் சொல்லவே முடியாது. அவருடைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே வேலை செய்யும் போது எந்த வேலையும் எனக்கு கஷ்டமாகத் தெரிந்ததில்லை. சொல்லப்போனால் மிகவும் சீக்கிரமாகவே அந்த வேலையை முடித்துவிட முடியும்.


அந்த இசையே 'டொம் டொம்' என்ற சத்தத்துடன் (இப்போது வரும் குத்துப்பாடல்கள் போல்) இருந்தால் தனிமையில் அந்த இசையேப் பெரும் தலைவலிதான்.

பள்ளிப்பாடங்களைப் படிக்கும்போது கூட, அனைவரும் தனியாக உட்கார்ந்து படித்தால் தான் மண்டையில் ஏறும் என்றெல்லாம் சொன்னதுண்டு. ஆனால் என்னால் அப்படி படிக்கப் பிடித்ததே இல்லை. தனியாக உட்கார்ந்து புத்தகத்தை விரித்தாலே என்னுடைய சிந்தனை வேறு பக்கம் போய்விடும். அப்போது இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டேப் படித்தால் தான் அந்தப் பாடம் என் மண்டையில் சீக்கிரம் ஏறும்.

அப்படிப் பாடல்களைக் கேட்டுக்கொண்டேப் படிக்கும்போது நான் தனிமையில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை. செய்யும் வேலையும் கஷ்டமாகத் தெரிந்ததில்லை. தூங்கும் போது கூட இரவு பத்து மணிக்கு மேல் ஃஎப்.ஃஎம்மில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருப்பேன். அப்போது அன்றாடம் மனதில் ஏற்படும் வலி கூட இல்லாமல் போகிறது. அவருடைய மெலடிகளால் மனதில் ஒரு துள்ளல்.


எப்போது டாம் அண்ட் ஜெர்ரி போல் முட்டிக்கொண்டிருக்கும் நானும், என் கணவரும் ஒத்துப்போகும் ஒரே விஷயம் இளையராஜாவின் பாடல்களைக் கேட்பதில் மட்டும்தான். எங்கள் இருவருக்கும் சண்டை முத்திப்போனால் அப்போது உடனே எங்கள் இருவருக்கும் பிடிக்கும் இளையராஜாவின் பாடல்களைப் போட்டுவிடுவேன். உடனே இருவரும் சண்டையை மறந்து அந்தப் பாடல்களைக் கேட்பதில் மும்முரமாகிவிடுவோம்.

என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இளையராஜாவின் மெட்டுக்கள் மருந்தாகவே அமைந்திருக்கிறது.

இப்போது வரும் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சீக்கிரமே சலிப்பையும் தந்து விடுகிறது, சில நேரங்களில் சில பாடல்கள் தலைவலியையும் சேர்த்துக் கொடுத்துவிடுகிறது. மனதில் நிற்கும் பாடல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.


தனிமையிலே இனிமை காண முடியுமா? என்று கேட்டால் என்னுடையத் தனிமையில் இளையராஜாவின் பாடல்களால் மட்டுமே இனிமையைக் காண முடியும்.
 
 

29 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

என்றும் இனியவை.

அன்பரசன் said...

மிகசரியா சொன்னீங்க..
என் மன ஒட்டங்களை வரிகளாக்கினால் என்ன கிடைக்குமோ அதுவே இந்த பதிவு என் சொல்லலாம்.
எனக்கும் தனிமை மிகப் பிடிக்காத ஒன்று.
அவ்வாறு இருக்க நேர்ந்தால் கண்டிப்பாக இளையராஜாவின் இசை கண்டிப்பாக என்னுடன் இருக்கும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

தமிழ் அமுதன் said...

அருமை...! இளையராஜா நமெக்கெல்லாம் ஒரு வரம்..!

Anonymous said...

"இளைய ராஜா" அவரு எப்பவும் ராஜ தான..
என்ன ஆச்சு பதிவுலகத்திற்கு, இன்னைக்கே 5 பேரு இளைய ராஜா பத்தி எழுதியிருக்காங்க :)

bogan said...

யார் டாம் யார் ஜெர்ரின்னு சொல்லலியே...

சௌந்தர் said...

எனக்கும் தனிமை பிடிக்காது இளையராஜா பாடல்கள் புடிக்கும்... இன்னும் அவர் பாடல்கள் இனிமை தான்

இம்சைஅரசன் பாபு.. said...

சரியாக சொன்னிர்கள் நீங்களும் ,கணவரும் ன்னு சொன்னேங்க .என் வீட்டுல நானும் என் மனைவியும் சில நேரத்தில் என் செல்ல குழந்தை கூட இளையராஜா பாட்டுக்கு தலை அசைக்கும் .இன்னும் விரிவாக எழுத வேண்டும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

இது தனிமையை பற்றிய பதிவா... இல்லை இசைஞானியை பற்றிய பதிவா...

எதுவாக இருந்தாலும் மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் எண்ண ஓட்டங்களை...

தனிமையும் எப்போதும் ஓன்று போல இருப்பதில்லை.. அதுவும் காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடும்.. சில சமயங்களில் தனிமை சுகமாகவும், சில சமயங்களில் சுமையாகவும்..

தனிமையான பொழுதுகளில் மட்டுமே இசையை ரசிக்க முடியும்.. ஆனால் பல சமயங்களில் இந்த தனிமையே இசையா மாறி விடுவதுண்டு..

நல்ல பதிவு சகோதரி...

தமிழ் உதயம் said...

உண்மை. இளையராஜா தமிழ் திரையுலகிற்கு வராமல் போய் இருந்தால் வெற்றிடமாக இருந்து இருப்பது, தமிழ் திரை இசை மட்டுமல்ல, நம் இசை தேடல்களும் தான்.

Priya said...

தனிமை + இசை பற்றிய உங்கள் எண்ணங்களை அறிந்ததில் மகிழ்ச்சி!

subra said...

மிகவும் உண்மை சகோதரி ,எங்கள் வீட்டிலும் இது
நடக்கும் .வாழ்த்துக்கள் .

பொன் மாலை பொழுது said...

நான் தனியாக என்றும் இருந்ததில்லை. ராஜாவின் பாடல்கள் உடன் இருக்கும் போது ஏது தனிமை என்ற உணர்வு ??
ராஜாவின் இசை நிறைய பேருக்கு ஒரு வரம். இன்றைய நாளில் அவரை என்னுடன் எப்போது வைத்துக்கொள்ளும் வசதியை நான் மிகவும் விரும்புகிறேன். என்னுடைய i pod ஐ சொன்னேன்!.
--

இனியா said...

Well Said...

கவி அழகன் said...

சுவாரசியமா எழுதியுள்ளீர்கள்

raja said...

தனிமை + இளையராஜா இசை = தியானம் அல்லது இனிமையாக வாழ்வது.

அறியா சிறுவன் said...

http://aatralaithedi.blogspot.com/2010/10/blog-post_27.html

ராஜாவின் ஆன்மீக பாடல் ஒன்று

அன்பரசன் said...

//வெறும்பய said...

இது தனிமையை பற்றிய பதிவா... இல்லை இசைஞானியை பற்றிய பதிவா...

எதுவாக இருந்தாலும் மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் எண்ண ஓட்டங்களை...

தனிமையும் எப்போதும் ஓன்று போல இருப்பதில்லை.. அதுவும் காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடும்.. சில சமயங்களில் தனிமை சுகமாகவும், சில சமயங்களில் சுமையாகவும்..

தனிமையான பொழுதுகளில் மட்டுமே இசையை ரசிக்க முடியும்.. ஆனால் பல சமயங்களில் இந்த தனிமையே இசையா மாறி விடுவதுண்டு..

நல்ல பதிவு சகோதரி...//

தனிமை ஸ்பெஷல் ஜெயந்த் சொல்லிட்டாரு அப்புறம் என்னங்க...

Sriakila said...

வருகைக்கு நன்றி புவனேஸ்வரி ராமநாதன்!

நன்றி அன்பரசன்!
என்னைப் போல‌வே சிந்தித்த‌தில் ம‌கிழ்ச்சி.

நன்றி த‌மிழ் அமுத‌ன்!

நன்றி போக‌ன்!
இப்போதைக்கு நான் தான் டாம். ஏனென்றால் ரொம்ப‌வும் பூசை வாங்குவ‌து நான் தானே.

நன்றி செள‌ந்த‌ர்!

நன்றி இம்சைஅரசன் பாபு!
இளையராஜாவைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி ஜெயந்த்!
தனிமை கொடுமை என்பது என்னுடைய அனுபவத்தில் ஏற்பட்டக் கருத்து மட்டுமே.

நன்றி தமிழ் உதயம்!

ந‌ன்றி ப்ரியா!

வ‌ருகைக்கு ந‌ன்றி சுப்ரா!

ந‌ன்றி மாணிக்க‌ம்!

ந‌ன்றி இனியா!

ந‌ன்றி யாத‌வ‌ன்!

ந‌ன்றி ராஜா!

ந‌ன்றி அறியா சிறுவ‌ன்!

ம‌றுப‌டியும் வ‌ருகை த‌ந்த‌த‌ற்கு ந‌ன்றி அன்ப‌ர‌ச‌ன்!

Thekkikattan|தெகா said...

:)) தனிமையில் இளையராஜா என்ற தலைப்பை படித்தவுடன், ராஜாதான் தனிமைபடுத்தப்பட்டார் என்றளவில் பதிவு போலன்னு நினைச்சு படிக்க ஆரம்பிச்சா போகப் போக உங்க தனிமையை விரட்ட ராஜா பாடல்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

தனிமையை அனுபவிக்கணுங்க. எப்பயாவது அது தேவைப்படும் புறத் தூண்டுதல்கள் ஏது மற்று, தனிமையில் இருக்கும் பொழுது, அது நம் கூடவே நாமே உரையாடல் நடத்திக் கொள்ள அமையும் ஒரு அருமையான தருணம். ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாக, போரிங்காக, எதிர்மறையாக தோன்றினாலும் நாட்கள் நகர, நகர ஆழ் மனதின் நல்ல எண்ணங்களின் படி எதற்கும் சமரசமற்று மிதக்க ஆரம்பிச்சிடலாம். :)

Solitude is a special gift one can present to one'self.

ஜெயந்தி said...

எனக்கும் பாடல்கள் என்றால் உயிர். நானும் உங்களைப்போலவே பாட்டுக்கேட்டுக்கொண்டேதான் வேலை செய்வேன்.

'பரிவை' சே.குமார் said...

ராஜா ராஜாதான்.

நானும் ராஜாவின் பாடல்களின் பரம விசிறி.

Mathi said...

பாட்டு கேட்டுகிட்டே படிப்பது ரொம்ப ஜாலி அகிலா !!!
நானும் அப்படியே !! நல்லா இருக்கு பதிவு

Jagannathan said...

அருமையான பதிவு!

உங்கள் எண்ணங்க்களை அருமையாக விவரித்திருக்கிறீர்கள்.

இளையராஜாவின் பாடல்கள் என்றுமே அளுக்காத இனிமையான ராகங்கள்தான்.

Thanglish Payan said...

Superb post..

S Maharajan said...

இளையராஜா
''இவருக்கு இசை என்று பெயர்
இவர் இசை எங்கள் உயிர்''

Sriakila said...

நன்றி Thekkikattan|தெகா!

நன்றி ஜெயந்தி!

நன்றி குமார்!

நன்றி ம்தி!

Sriakila said...

Thanks for ur comments Mr.Jagannathan!

Thank u Thanglish Payan!

நன்றி மகாராஜன்!

ராமலக்ஷ்மி said...

// சண்டையை மறந்து அந்தப் பாடல்களைக் கேட்பதில் மும்முரமாகிவிடுவோம்.//

நல்ல உத்தியாய் இருக்கே:))! அதுசரி, யாருக்குதான் பிடிக்காது இளையராஜாவின் இசை?

தனிமை..ம்ம் எப்போதாவது இருக்கலாம். அடிக்கடி அல்ல.

R.Gopi said...

70களின் பிற்பகுதியில் ஆரம்பித்து, 80களில் விஸ்வரூபம் எடுத்து, 90களில் இசைப்ரவாகமாக பெருக்கெடுத்து ஓடும் இசைராஜாவின் இசையே எனக்கு இன்றும், என்றும் தனிமை போக்கி...

இந்த வகையில் நீங்களும் அப்படியே என்றதில் மெத்த மகிழ்ச்சி...