இதோ இன்னும் சிறிது நேரத்தில் புது வருடம் பிறக்கப்போகிறது. புது வருடம் எனக்கு எப்பவும் ஸ்பெஷல் தான், அன்று என் அண்ணனின் பிறந்த நாளும் கூடவே வருவதால்.
ஒவ்வொரு புது வருஷம் பிறக்கும் போதும் இந்த வருஷத்திலிருந்தாவது இந்த இந்தப் பழக்கத்தை விட்டு விட வேண்டும் எனற எண்ணம் நம் எல்லோருக்கும் இருக்கும்.
ஆனால் அதைக் கொஞ்சமாக முயற்சி செய்து பார்க்கவே சில மாதங்கள் தேவைப்படும். அதான் அடுத்த வருஷம் இருக்கே என்று அப்பப்போ மனதுக்குள் ஒரு அலாரம் வேறு அடித்துத் தொலைக்கும் (கெட்ட மனசாட்சி...சே!)
அந்த அலாரத்துடன் ஒரு சில மாதங்கள் ஓடும். அந்த அலாரம் நன்றாக ஆணி அடித்து உட்கார்ந்துக் கொண்டு, நீ இத செஞ்சா உன்னோட இமேஜ் என்ன ஆவது? என்று நம்மை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கும்.
அதில் சில மாதங்கள் போய்விடும் போது அடுத்த வருஷத்தில நாம இதக் கண்டிப்பா ஃபாலோ செய்யலாம் என்று சமர்த்தாக மனசாட்சி படுத்துக்கொள்ளும்.
புதுவருஷம் எதுக்குப் பயன்படுதோ இல்லையோ இதுக்குத்தான் ரொம்பவும் யூஸ் ஆகுது. ஓகே.. இந்தப் புது வருஷத்தில இருந்து யார் யார் எந்தெந்தப் பழக்கத்த விடணும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...
1. கூட இருக்கறவங்க அழுதுக்கிட்டோ, திட்டிக்கிட்டோ இருக்கும் போது ஏன் இப்படி என்னைய பாடாய்படுத்திறீங்கன்னு அபத்தமா கேள்வி எல்லாம் கேட்காம, ஏதாச்சும் பெரிசா ஆயிடப்போகுதுன்னு ஒரு டம்ளர் தண்ணிக் கொடுத்து கூல் பண்ணுங்க. தண்ணிக் கொடுத்தா தெம்பா உட்கார்ந்து அழவோ, திட்டவோ செய்வாங்கன்னு விபரீதமா யோசிச்சுத் தொலைக்காதீங்க.
2. but ஆனால், so அதனால (ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு யாராச்சும் சொல்லுங்க), ஆங்ங்.... like ஆங்ங்.... like இந்த மாதிரி இங்கிலீசுல பீட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு விடுறவங்க கொஞ்சமாவது அதக் கேட்கறவங்க நெலைமைய நினைச்சுப் பாருங்க...
3. நைட்டியோட மெயின் ரோடு வரைக்கும் போறப் பெண்களும், ஷாட்ஸ் போட்டுட்டு பைக் ஓட்டிட்டுக் கெட்ட அலப்பறய விடுற ஆண்களும் இந்த வருஷத்திலாவது அதை மாத்திக்கிட்டா மக்களுக்கு நல்லது.
4. ரொம்ப சூப்பரா சமைக்கிறவங்க எல்லாம் வெங்காயம், தக்காளி எல்லாம் போடாத சுமாரான சமையலைப் பழகிக்கறது வீட்டுக்கு நல்லது.
5. மிஸ்டு கால் கொடுத்தேப் பழக்கப்பட்டவங்க இனிமேலாவது கால் பண்ணிப் பேசணும்னு நினைங்க.
6. குழந்தைங்க சொல் பேச்சுக் கேட்டு அவங்களப் பெத்தவங்க கொஞ்சம் அவங்ககிட்ட மரியாதையா நடந்து, பெற்றோர்கள் சங்கத்தோட மானத்தக் காப்பாத்துங்க.
7. முப்பது வயசுக்கு மேல இருக்கறவங்க உங்க சம்பளத்தில இருந்து ஒரு பகுதியை உங்களோட ரெகுலர் மெடிக்கல் செக்கப்புக்கு ஒதுக்கி, டாக்டர்ஸ்-க்கு வாழ்வு கொடுங்க.
8. இனிமேலாவது டாய்லெட்டுக்குப் போகும்போதும், புத்தகத்தை கூடவே எடுத்துக்கிட்டுப் போய் 'நீங்க பெரிய புத்தகப்புழு' , 'பெரிய அறிவாளி' அப்படியெல்லாம் சொல்லவச்சு மத்தவங்க வாய நாறடிக்காதீங்க.
9. மத்தவீட்ல நடக்கிற பஞ்சாயத்தப் பார்க்கிறதுக்கு முன்னாடி, நம்ம வீட்டுப் பஞ்சாயத்தக் கொஞ்சம் மனசில வச்சுக்கோங்க.
10. கடைசியா மனசுக்குள்ளேயே வச்சிருக்கிற அன்பையும், பாராட்டையும் நம்ம கூட இருக்கறவங்களுக்கு அள்ளி, அள்ளிக் கொடுங்க.
HAPPY NEW YEAR 2011!
Friday, 31 December 2010
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
மிஸ்டு கால் கொடுத்தேப் பழக்கப்பட்டவங்க இனிமேலாவது கால் பண்ணிப் பேசணும்னு நினைங்க////
நீங்க முடிவு பண்ணியாச்சா
10. கடைசியா மனசுக்குள்ளேயே வச்சிருக்கிற அன்பையும், பாராட்டையும் நம்ம கூட இருக்கறவங்களுக்கு அள்ளி, அள்ளிக் கொடுங்க////
நான் அள்ளி தாரேன் வாங்கிகொள்ளுங்க ....
இனிய பபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
அழகான ஆலோசனைகள்:)!
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
சுறுக்கமாக சொன்னால் ஒன்றே செய் நன்றே செய் இன்றே செய் அதை எப்பொழுதும் செய்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Thank you!
Soundar
Shanmuga kumar
Ramalakshmi
Jagannathan
Kalaneasan
Jayanth
Bhuvaneswari Ramanathan
//மிஸ்டு கால் கொடுத்தேப் பழக்கப்பட்டவங்க இனிமேலாவது கால் பண்ணிப் பேசணும்னு நினைங்க.//
ippadi niraya peru irukanga akila..
wish u happy new year !!! welcome back...blogger ku.
Thanks Mathi & Wish you the same.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்
இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்!
இந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.
நன்றி
Thanks Maanavan!
சிலவற்றை நகைச்சுவையாகச் சொல்லியிருந்தாலும் அத்தனையுமே உண்மை.புத்தாண்டில் செயலாக்குவோம்.வாழ்த்துகள் தோழி !
அந்த கடைசி பாயிண்ட் ரொம்ப பிடிச்சிருக்கு! புத்தாண்டு வாழ்த்துக்கள் :)
சிலவற்றை நகைச்சுவையாகச் சொல்லியிருந்தாலும் அத்தனையுமே உண்மை.
உங்களுக்கு இந்த 2011 சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
ஹேமா சொன்னதை தான் நானும் நினைச்சேன்...நகைச்சுவையா சொன்னாலும் அதில் நிறைய உண்மைகளும் இருக்கு..ஹாப்பி நியூ இயர்!
நன்றி ஹேமா!
நன்றி பாலாஜி!
நன்றி சே.குமார்!
நன்றி ஆனந்தி!
உங்கள் அனைவருக்கும் என்னுடையப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Post a Comment