கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன் பாளையத்தில் 'ஹெர்பல் கிளினிக்' நடத்தி வருபவர் டாக்டர் முகுந்தன். இவர் மூலிகை மருத்துவம் பற்றி அறிந்தவர். பூமியில் உள்ள எண்ணில் அடங்காத மூலிகைகளின் பயன்களைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் டாக்டர் முகுந்தன், தீய வழிகளுக்கு மூலிகைகள் பயன்படுத்தப்படுவதை ஆய்வு செய்து வருகிறார்.
அதைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் ஏற்படுத்த... தன் ஆய்வில் அறிந்த விஷயங்களை ஒரு தமிழ் நாளிதழில் பகிர்ந்து கொண்டார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.
அவர் கூறிய விளக்கங்கள் இதோ உங்களுக்காக;
"மந்திரம் பண்றேன், செய்வினை வைக்கிறேன், தகடு வைக்கிறேன்னு சொல்லி மாந்திரீகம் பண்ணக் கூடியவன் பல மந்திரங்களை ஓதி, பூஜை போட்டுட்டு கடைசியா, ஒரு பொட்டலத்துல ஏதோ பொடியையோ, தீர்த்தத்தையோ நிச்சயம் தருவான். அது வேறொண்ணுமில்ல...சாட்சாத் மூலிகை தயாரிப்புதான்! அதாவது, தாவரங்கள்ல மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் இருக்கிற மாதிரி, விஷத்தன்மை வாய்ந்த மூலிகைகளும் நிறைய இருக்கு.
வசிய மருந்து வைக்கிறவங்க அதைத் தேடிப்பிடிச்சு பொடி, தீர்த்தம்னு ரெடி பண்ணி, அதை தெரிந்தவர்கள் மூலமா உணவுல கலந்து கொடுப்பாங்க. மூலிகையோட நச்சுத்தன்மை ரத்தத்தில் கலந்து, தன்னோட ஆட்டத்தை துவக்கும். எதிர்மறை தாவரங்களோட காம்பினேஷனை தெரிந்து வைத்திருப்பதுதான் இவர்களது பலம. குறிப்பிட்ட இலை, வேர், முள்ளுனு தேடிப்பிடிச்சி பொடி பண்ணி வெச்சுக்கிட்டு, அதைப் பயன்படுத்தி புகையைக் கிளப்பி 'பிளேபாய்' சாமியார்கள் பெண்களை நினைவிழக்க செய்து விடுவார்கள்.
இப்படி மருந்துக் கொடுக்கப்பட்டவங்க இயல்புக்கு விநோதமா நடந்துக்கறதைத்தான் 'வசியம் வச்சுட்டாங்க' அப்ப்டின்னு சொல்றாங்க. இதெல்லாமே முழுக்க, முழுக்க உடல் சார்ந்த பாதிப்புகளே தவிர அமானுஷ்யமோ, தெய்வத் தன்மையோ துளியும் கிடையாது. கிட்டத்தட்ட ஃபுட் பாய்சன் போலத்தான்.
பெரும்பாலான ம்ருந்துகள் ஜீரணமாகி ரத்தத்துல கலந்த பின்னாலதான் அதோட வேலையைக் காட்டும். இதோட பாதிப்புகள் நீண்ட நாட்கள் நீடிக்கும். இப்படியான தொல்லைககு ஆளாகி உடல்நலமோ அல்லது மனநலமோ பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த சிகிச்சையும், கவுன்சிலிங்க்கும் தேவை."
(நன்றி!: விகடன்)
இது போன்ற தொல்லைகளில் சிக்கி மீள முடியாமல் இருப்பவர்கள் முக்கியமாகப் பெண்கள். பெண்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு கஷ்டம் என்று வரும்போது, வீட்டில் உள்ளவர்களே அப்பெண்ணை மாந்திரீகம் செய்பவர்களிடம் கூட்டிக்கொண்டு செல்வது ரொம்பவும் கொடுமை. படித்தவர்களும் இந்தப் படுகுழியில் விழுவது எப்படி என்றுதான் தெரியவில்லை.
இதைப் படித்த பிறகும் விழித்துக்கொள்ளாவிட்டால் வினை நமக்குத்தான்!
Tuesday, 11 January 2011
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
நல்ல விழிப்புணர்வு பதிவு அகிலா! இவ்வளவு நாள் இத பத்தி தெரியாது இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். பகிர்வுக்கு நன்றி :)
ஆக்கப்பூர்வமான பதிவு.பகிர்வுக்கு நன்றி
நல்ல விழிப்புணர்வு பதிவு
பகிர்வுக்கு நன்றி!!
நல்லாருக்கு....அகிலா.
இந்த மூடநம்பிக்கைகள் ஆண் பெண், படித்தவர் படிக்காதவர் வேறுபாடின்றி எல்லோரிடத்திலும் பரவி இருக்கிறது.
ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வு பதிவு.
yes.akila niraya per innum nambranga!!
நல்ல பதிவு.. பகிர்வுக்கு நன்றி!
நல்ல விழிப்புணர்வு பதிவு..
ஆனால் என்ன சொன்னாலும் திருந்துவாங்கன்னு நினைக்கிறேங்களா...
அடிமட்டம் வரையில் ஆழப்பாய்ந்துள்ளது இந்த விஷ வேர்
//அடிமட்டம் வரையில் ஆழப்பாய்ந்துள்ளது இந்த விஷ வேர்
// நண்பர் எல் கே அவர்கள் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்.. சரியான தருணத்தில் பதிவிட்டிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..!
இதுல இப்படி ஒரு அறிவியல் சார்ந்த விஷயம் இருப்பதை தெரியபடுத்தியதற்கு நன்றி அகிலா...!!
நேரம் கெடைக்கும் போதுஅப்படியே இங்கேயம் வந்து போங்க...
http://vinmukil.blogspot.com/
http://microscopicalview.blogspot.com/
வருகை தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!
Sir, ur information was good i trust u. tell me 1 thing wen some had given that medicine to forget 1 person. how to rescue that person from that poison full medicine. he/she should not forget he/she should be restored. here i am having person in that sitution someone given that medicine. i need to get them back as before.
please ennakku ippadithaan pala sammiuarkal enga periamma moolamaka pala thadavai vethalaiyil ethaiyo maditoo koduthu enaku stomach pain nerve pain digestion problems mental disorders are happening still taking depression pills endoscopy colonoscopy paninal no problem is the result what to do but my perimma and my relatives like my mama are behaving differently to me avan samiyar marunthu koduthavudan adutha naal toilet green coloril part partaha vanthathoo itharku oru vali solluunga please mukunthan
Post a Comment