Sunday 3 April, 2011

இருவீடு, இருவாசல்!!


அந்த நாளில் அப்பாவிடம்
எனக்கு இவ்வளவு வேண்டும்
என்ற செய்தியை மட்டும் கொடுத்துவிட்டு
நானாகவே பாக்கெட்டிலிருந்து 
உரிமையுடன் எடுத்துக்கொள்வேன்


இன்று எனக்காக செய்யும் 
ஒவ்வொரு செலவையும்
அப்பா கேட்கமாட்டார் என்பதால்
பாக்கெட்டில் வலுக்கட்டாயமாக வைத்துவிட்டு
அதன் பிறகே செய்தியை சொல்கிறேன்


ஏன் இந்த மாற்றம் என்று 
பல நேரம் யோசிக்கிறேன்....


மாற்றத்திற்கு காரணம்
என் கழுத்தில் இருக்கும் தாலியா?
இல்லை..நானே போட்டுக்கொள்ளும் வேலியா?


யதார்த்தங்கள் நிறைந்த வாழ்க்கை
பலநேரம் ஆச்சர்யப்பட வைக்கிறது.....


அந்த ஆச்சர்யத்தில் 
வந்து வந்து போவது
பெண்ணுக்கு மட்டும்
இருவீடு, இருவாசல்!!



11 comments:

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

தமிழ் உதயம் said...

நெகிழ்வான கவிதை - நிஜங்களுடன்.

ப்ரியமுடன் வசந்த் said...

அப்பாகிட்ட இருக்கிற உரிமைன்னு கூட வச்சிக்கிலாம் அதுமட்டுமில்லாமல் இப்போ அவருக்கு கொடுப்பது அப்பாவோட பணமில்லியே :)

நிசம் சொல்லும் கவிதை :)

Nagasubramanian said...

அருமை

ஹேமா said...

அப்பா மகள் உறவை உணர்வோடு எழுதியிருக்கிறீர்கள் அகிலா.எனக்கும் அப்பா ஞாபகம் வருது !

Yaathoramani.blogspot.com said...

மிக அருமை
வித்தியாசமான சிந்தனை
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

காற்று வாங்கப் போனேன்-ஒரு
கவிதை வாங்கி வந்தேன்
என்பதைப்போல
உங்கள் பதிவுக்கு
பின்னூட்டம் இட முயன்றபோது
ஒரு புதிய சிந்தனை வந்தது
அதையே ஒரு பதிவாகப் போட்டுள்ளேன்
இதை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்
என்னை சிந்திக்க தூண்டியமைக்கு நன்றி

ADMIN said...

அசத்தல் கவிதை..யதார்த்தமாக நெஞ்சில் பதிந்தது..! வாழ்த்துக்கள்..!!

R.Gopi said...

நெகிழ்வான ஒரு கவிதை... நிதர்சனமான உண்மையை அழகாய் விளக்கியது...

//யதார்த்தங்கள் நிறைந்த வாழ்க்கை
பலநேரம் ஆச்சர்யப்பட வைக்கிறது.....

அந்த ஆச்சர்யத்தில்
வந்து வந்து போவது
பெண்ணுக்கு மட்டும்
இருவீடு, இருவாசல்!!//

முடிவில் வந்த இந்த முத்தாய்ப்பான வரிகள் கவிதைக்கு மேலும் அழகு சேர்த்தது...

வாழ்த்துகள்...

நேரமிருப்பின் என் இரு வலைப்பக்கங்களின் பக்கமும் வரலாமே ஸ்ரீஅகிலா...

www.edakumadaku.blogspot.com
www.jokkiri.blogspot.com

பாலமுரளிகிருஷ்ணன் said...

திருமணம்,
அப்பாவிற்கு
மாப்பிள்ளை என்ற
உறவையும்
அவரின் மனைவியான
மகளையும்
அறிமுகம் செய்கிறது
எதார்த்தமாய்...

பாலமுரளிகிருஷ்ணன் said...

திருமணம்,
அப்பாவிற்கு
மாப்பிள்ளை என்ற
உறவையும்
அவரின் மனைவியான
மகளையும்
அறிமுகம் செய்கிறது
எதார்த்தமாய்...