Monday 9 August, 2010

கனவு கண்டேன்!

சிறு பிள்ளைப் போல் துள்ளித் திரியக் கனவு கண்டேன்!
பெண் பிள்ளைப் போல் அடக்க, ஒடுக்கமாய் இரு.
ஆசைப்பட்டான் அண்ணன்.


மேலே படிக்க கனவு கண்டேன்!
படிப்பெதற்கு, சமையல் பழகு.
ஆசைப்பட்டார் அம்மா.


சாதனை செய்யக் கனவு கண்டேன்!
இந்த மாப்பிள்ளை உனக்கு ரொம்பப் பொருத்தம்.
ஆசைப்பட்டார் அப்பா.


அனைவரது ஆசைகளும் நிறைவேறியது.
தேங்கிப்போனது என் கனவுகள் மட்டுமே!

10 comments:

எல் கே said...

oru adakkapatta pennin vethanaigal

ஜெயந்த் கிருஷ்ணா said...

தனது ஆசைகளையும் கனவுகளையும் சொந்தங்களுக்காக தொலைத்த ஒரு பெண்ணின் வேதனை...

Anonymous said...

சிறு பிள்ளைப் போல் துள்ளித் திரியக் கனவு காண்பாள்!
ஆண் பிள்ளைப் போல் உற்சாகமாய் இருக்க...
ஆசைப்படு நண்பியாய்...


மேலே படிக்க கனவு காண்பாள்!
சமையலெதற்கு, பட்டம் வாங்கு...
ஆசைப்படு அன்னையாய்...


சாதனை செய்யக் கனவு காண்பாள்!
எந்த மாப்பிள்ளையும் இப்போது வேண்டாம்...
துணையாய் நில் தோழியாய்.


இருவரது ஆசைகளும் நிறைவேறும்.
எதிர்காலத்தில் உன் அன்பு மகளால்...

கண்ணன் said...

மிகவும் அருமை

கண்ணன் said...

மிகவும் அருமை

நிலாமதி said...

மிகவும் நன்றாய் சொல்லியிருகிறீர்கள். நிறைவேறத் ஆசைகள் வலிக்கும்.
உங்க மகள் மூலம் கண்டு விடுங்கள்.

name said...

NALLA IRUKKU.UNGA POST

Deepa said...

அளவெடுத்தாற்போல் நறுக்கென்ற வரிகள். அருமை!
இது போல் நிறைய‌ எழுத‌வும்.

Deepa said...

அளவெடுத்தாற்போல் நறுக்கென்ற வரிகள். அருமை!
இது போல் நிறைய‌ எழுத‌வும்.

Priya said...

கவிதை அருமை!