Wednesday, 24 November, 2010

அய்யோ! குழந்தைகளின் குத்தாட்டம்

வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு 5 நிமிட இடைவெளியில் வேறு ஒரு சேனலில் குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. அந்த நடனப் போட்டியில் குழந்தைகள் ஆடிய ஆட்டம்.. அடடா! அது ஆட்டமே அல்ல, குத்தாட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக் குத்தாட்டத்தில் கூட குழந்தைகளின் மழலைத்தனமும், நளினமும் இல்லை.

அவர்களின் வயதைத் தாண்டிய விரசமான பாடல் வரிகளுடன் அவர்கள் ஆடிய விதமும், அந்தப் பாடல் வரிகளுக்குக் காட்டிய எக்ஸ்ப்ரஷ
ன்களும் பார்க்க சகிக்க முடியவில்லை. ஒரு ஆறு, ஏழு வயதுக்கே உரியக் குழந்தைத்தனம் அவர்களிடம் காணாமல் போயிருந்தது.

இதில் குழந்தைகளிடம் உள்ளக் குறைகளை விடப் பெற்றோர்களின் குறைகளேப் பெரிதாகத் தெரிந்தது. இது போன்றப் பாடல்களைத் தேர்வு செய்து, அதற்கு நடனப் பயிற்சியும் கொடுத்து, அதை ரசிக்கவும் ஒரு பெற்றோரால் எப்படி முடிகிறது என்றுதான் தெரியவில்லை.

இது போன்ற நடன நிகழ்ச்சிகளில் அவர்கள் அணியும் உடை அதை விடக் கொடுமை. 'கொழுக், மொழுக்' என்று இருக்கும் குழந்தைகளுக்கு கூட அவர்கள் உடலமைப்புக்கு ஏற்ற உடைகளை அணியாமல்.... என்னக் கொடுமைங்க இது?

சின்னப் பய..புள்ளைங்க எல்லாம் இப்படி கெளம்பிடுச்சுகளே.. நெனைச்சாலே ரொம்ப வேதனையான ஃபீலிங்காத்தான் இருக்கு. ஒருவேளை குழந்தைகளுக்கு எதிராக நாட்டில் நடக்கும் அத்தனை வக்கிரங்களுக்கும் ஆரம்பப்புள்ளி இங்கதான் இருக்கோ?

போட்டியின் இறுதியில் நடுவராக உட்கார்ந்திருப்பவர்கள் கொடுத்தக் கமெண்ட்ஸ் என்னத் தெரியுமா? "உங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆச்சு. சூப்பர்!"

கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி-ங்கிறாங்களே....அப்படின்னா என்ன?

கடவுள் சாட்சியா, அக்னி சாட்சியா, பெற்றோர்கள் சாட்சியா, உறவினர்கள் சாட்சியா மற்றும் எல்லோருடைய சாட்சியா (ஷ்ஷ்..அப்பா! ப்ளாக்ல எழுத ஆரம்பிச்சாலே ஒரு வார்த்தைக்கு எத்தனை பில்டப் கொடுக்க வேண்டியதிருக்கு..) ஒருத்தருக்கொருத்தர் கையைப் புடிச்சுக் குடும்பம் நடத்தறக் கணவன், மனைவிக்கு அமையாத கெமிஸ்ட்ரி, டான்ஸ் ஆடற சின்னக் குழந்தைங்களுக்குக் கூட அமையறதா சொல்றாங்களே... அதென்ன கெமிஸ்ட்ரி?

விவரம் தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கப்பா!
16 comments:

எல் கே said...

இதை எல்லாம் தடை செய்ய முடியாதா ? இதுவும் ஒரு வகையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைதானே ?

S Maharajan said...

இதில் குழைந்தைகளை மட்டும் குறை சொல்லி என்ன பயன் அவர்களின் பெற்றோருக்கு தெரிய வேண்டும்

//கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி-ங்கிறாங்களே....அப்படின்னா என்ன?//

பிசிக்ஸ் மாதிரி பாடாம இருக்குமோ?
நான் படிச்சு இருந்தா தெரியுமுங்க?

Anonymous said...

ரொம்ப கொடுமைங்க..
அதே மாதிரி ம்யூசிக் சேனல்ல பேசுற சில குழந்தைகள்ட்ட பாட சொல்லும் போது அவங்க பாடுறதும் இந்த மாதிரி ஆபாச குத்துப் பாடல்கள் தான் :(

sivakumar said...

ஒருவேளை குழந்தைகளுக்கு எதிராக நாட்டில் நடக்கும் அத்தனை வக்கிரங்களுக்கும் ஆரம்பப்புள்ளி இங்கதான் இருக்கோ?//

ஆமாம்.

சௌந்தர் said...

கெமிஸ்ட்ரி?///

என்னது கெமிஸ்ட்ரியா இதுக்குதான் ஸ்கூல்க்கே போறது இல்லை இங்கேயுமா

எஸ்.கே said...

அந்த மாதிரி ஒன்னுமே இல்லை! ஆனாலும் இந்த வார்த்தையை எல்லாரிடமும் சொல்றாங்க!
நல்லா ஒற்றுமையா ஆடறாங்க சொன்னா போதாதா!

ஜெயந்த் கிருஷ்ணா said...

கெமிஸ்ட்ரி?

//

இதான் இந்த கெமிஸ்ட்ரி பயபுள்ளையால தான் நான் பத்தாம்ப்போட படிப்ப நிப்பாட்டுனேன்... என்ன போய் கேக்குறீங்களே...

Priya said...

//சின்னப் பய..புள்ளைங்க எல்லாம் இப்படி கெளம்பிடுச்சுகளே.. நெனைச்சாலே ரொம்ப வேதனையான ஃபீலிங்காத்தான் இருக்கு.//.... மிக வேதனையாத்தான் இருக்கு. குழந்தைதனத்தை விரைவிலே அவர்கள் இழந்துவிட பெரியவர்கள் காரணமாக இருப்பது மிகவும் வருத்தக்கூடியது.

அன்பரசன் said...

//கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி-ங்கிறாங்களே....அப்படின்னா என்ன?//

இது கூட தெரியாதா?
NaNO3 + KCl ------> NaCl(உப்பு) + KNO3

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களை தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன் வந்து செல்லுங்கள்...
http://verumpaye.blogspot.com/2010/11/blog-post_26.html

Sriakila said...

நன்றி கார்த்திக்!
//இதுவும் ஒரு வகையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைதானே//

ஆமாம் இதுவும் ஒரு வன்முறைதான்.நன்றி எஸ்.மகராஜன்!
//குழைந்தைகளை மட்டும் குறை சொல்லி என்ன பயன் அவர்களின் பெற்றோருக்கு தெரிய வேண்டும் //

குழந்தைகளை விடப் பெற்றோர்களுக்கு அறிவு கம்மிதானே..நன்றி பாலாஜி!
//அதே மாதிரி ம்யூசிக் சேனல்ல பேசுற சில குழந்தைகள்ட்ட பாட சொல்லும் போது அவங்க பாடுறதும் இந்த மாதிரி ஆபாச குத்துப் பாடல்கள் தான்//

குத்துப்பாடல்களில் தான் நல்லா ஆட்டம் போட முடியும்னு நெனைக்கிறாங்களோ!நன்றி தமிழ்வினை!நன்றி செளந்தர்!
//என்னது கெமிஸ்ட்ரியா இதுக்குதான் ஸ்கூல்க்கே போறது இல்லை இங்கேயுமா//

நீ அடம்பிடிச்சாலும் உன்னைய இந்த வயசில ஸ்கூலுக்குள்ள விட யார் ரெடியா இருக்கா?
நன்றி எஸ்.கே!
//அந்த மாதிரி ஒன்னுமே இல்லை! ஆனாலும் இந்த வார்த்தையை எல்லாரிடமும் சொல்றாங்க!
நல்லா ஒற்றுமையா ஆடறாங்க சொன்னா போதாதா!//

ரொம்பத் தெளிவான பதில்.நன்றி ஜெயந்த்!
//இதான் இந்த கெமிஸ்ட்ரி பயபுள்ளையால தான் நான் பத்தாம்ப்போட படிப்ப நிப்பாட்டுனேன்... //

அப்போ கெமிஸ்ட்ரிக்காக ஒரு தொடர்பதிவு எழுதலாமா ஜெயந்த்?
வரலாறுல என்னைய மாட்டி விட்டதாலப் பழிக்குப் பழி..நன்றி ப்ரியா!நன்றி அன்பரசன்!
//இது கூட தெரியாதா?
NaNO3 + KCl ------> NaCl(உப்பு) + KNO3//

எச்சூச்மி.. நீங்க கெமிஸ்ட்ரில புலின்னுத் தெரியுது. அதுக்காக இப்படி equation எல்லாம் போட்டுப் பயமுறுத்தக்கூடாது.

Jagannathan said...

இதற்கு பெற்றோர்களே முழு பொறுப்பு. குழந்தைகளை குட்டிச்சுவராக்குவதற்கு இதுவும் ஒரு வழி. சினிமா குத்துப் பாடல்களை தவிர்த்துவிட்டு கிராமிய நடனங்களான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், கும்மி போன்றவற்றை நம் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

'பரிவை' சே.குமார் said...

//போட்டியின் இறுதியில் நடுவராக உட்கார்ந்திருப்பவர்கள் கொடுத்தக் கமெண்ட்ஸ் என்னத் தெரியுமா? "உங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆச்சு. சூப்பர்!" //

எல்லா நடுவருக்குமே தெரிஞ்ச ஒரே வார்த்தை இதுதான்... பயபுள்ளக பள்ளிடத்துல இத படிக்கலை போல...
விட்டுத்தள்ளுங்க... இன்னும் கொஞ்சம் நாள்ல வேற பாடத்தைப் பத்தி சொல்லுவாங்க.

Mathi said...

nice post..akila..unmai than romba palaku kiranga kulanthaigalai...

Abi said...

ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆச்சு/கெமிஸ்ட்ரிநல்லா இருக்கு அப்பிடினு எங்க ஹ்ஸ்- கூட சொல்லுவாங்க.. ஆனா கெமிஸ்ட்ரினா என்ன இன்னிவரைக்கும் சொல்லலை. வேற யாராவது நல்லா தெரிஞ்சா சொல்லுங்க.

Abi said...

ஆமாங்க...சிங்கர் செலக்ஸன் அப்பிடினு பார்த்தா குட்டி குட்டி டிரஸ் போட்டு குட்டீஸ் பாட்டோட ஆடுதுங்கோ..காலம் ரொம்ப கெட்டுடுச்சு. நான் இப்போதான் புது ப்ளாக் ஓப்ன் செய்துள்ளேன்.