Tuesday, 30 November, 2010

பெண் மனசு - தொடர்பதிவு

வெறும்பய ஜெயந்த் 'பெண் மனசு' என்ற தலைப்பில் பெண் குரலில் பாடியப் பாடல்களின் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்த ஜெயந்த்துக்கு நன்றி!

பெண் மனதில் எனக்குப் பிடித்தப் பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இதைத் தொடர்கிறேன்.


பாம்பே ஜெயஸ்ரீயின் வசீகரக் குரலில் இளையராஜாவின் அற்புதமான இசையில் உருவானப் பாடல். 


நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென..

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்


இந்த ஒரு பாடலுக்காகவே நின்னைச் சரணடைந்தேன் என்று இளையராஜாவின் காலில் விழுந்து விடலாம். பாடலின் ஒவ்வொரு வரியும் மனதை விட்டு நீங்காதவை என்றும்.சித்ரா பாடிய இந்தப்பாடல் காதலனை நினைத்துப் பாடும் ஒரு அழகானப் பெண்மனதைக் கொண்டுவந்துவிடும்.


சோர்ந்து போகும் மனதுக்கு ஆறுதலாக அமையக்கூடியப் பாடல். ஸ்ரேயா கோஷல் அழகாகப் பாடியிருப்பார்.

4. காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள் - மங்கை ஒரு கங்கை

சுதந்திரமான மனதுடன் இயற்கையை ரசிக்கும் பெண் மனம். ஜானகியின் குரலில் வரும் அற்புதமான வரிகள்...

"அதோ அந்தப் புதுமலர் நானாகும் போது
அதை விட பெரும் சுகம் நான் காண்பதேது.. "

பாடல் வரிகளில் நாமும் இயற்கையோடுக் கலந்து விடலாம். இந்தப் பாடலுக்கான லிங்க் எங்கு தேடியும் எனக்குக் கிடைக்கவில்லை.


சித்ராவைத் தவிர இந்தப் பாடல் வேறு யார் பாடியிருந்தாலும் அது இனிக்குமா?  தெரியவில்லை. தன் காதலை ஏற்றுக் கொள்வதற்காகக் காதலனிடம் வேண்டும் பெண் மனம்.


குழந்தைகளுடன் குதூகலமாக இருக்கும் போது மனதிற்கு எவ்வளவு சந்தோஷம்!

"சிங்காரப் பிள்ளை என்றால் கண்ணார உன்னைக் கண்டால் சந்தோஷம் நெஞ்சில் பொங்குதம்மா..."

 சித்ரா பாடிய இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் நானும் குழந்தையோடு குழந்தையாக மாறி விடுவதுண்டு.


ஜானகி பாடிய இந்தப்பாடலில் கணவனை இழந்தப் பெண்ணின் உணர்வுகளை, பாடல் வரிகளுடன் நாட்டியத்திலும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார் நடிகை ரேவதி.


இந்தப் பாடலைப் பாடும் பெண்ணின் மனதையும், பெண்ணின் குரலையும்  உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா?


இசைக்கு அடிமையானப் பெண்ணின் மனம். ஜானகி அழகாகப் பாடியிருப்பார்.


அழகான வாழ்க்கையைக் கொண்டுவரும் பெண் மனம். சுதா இரகுநாதன் பாடியது. எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் இது.

இன்னும் நிறையப் பாடல்கள் பெண் மனதில், பெண் குரலில் இருக்கிறது. உங்களுக்காக எனக்குப் பிடித்தப் பத்துப் பாடல்களை மட்டும் பதிவில் கொடுத்திருக்கிறேன்.

எனக்குப் பிடித்த இந்தப் பாடல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும்  என்று
நினைக்கிறேன்.

14 comments:

தமிழ் அமுதன் said...

அருமையான தெரிவுகள்...!


இதில் சில பாடல்கள் எனக்கு உணவு போல...!

Priya said...

நல்ல தேர்வுகள்.

PALANI said...

வலைப்பதிவர்களே உஷார்

http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html

வெறும்பய said...

அருமையான தேர்வுகள் சகோதரி...

///
யாரது யாரது இடைவிடாது இசைப்பது - இங்கிலீஸ்க்காரன்

போகும் வழியெல்லாம் காற்றே - ரட்சகன்

. மாலையில் யாரோ மனதோடு பேச - சத்ரியன்

அனல் மேலே பனித்துளி - வாரணம் ஆயிரம்
///


குறிப்பாக இந்த பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை...

அழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி...

S Maharajan said...

நல்ல தேர்வுகள்.

தமிழ் உதயம் said...

எனக்கு பிடித்த சில பாடல்களும் உள்ளன, இந்த பட்டியலில்.

அன்பரசன் said...

1, 3, 8, 10
எனக்கும் மிகப் பிடித்தவை.

Balaji saravana said...

ரொம்பப் பிடிச்சிருக்கு உங்கள் தேர்வுகள்

சௌந்தர் said...

யாரது யாரது

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு


அழகு மலராட அபிநயங்கள் கூட - வைதேகி காத்திருந்தாள்

மாலையில் யாரோ மனதோடு பேச - சத்ரியன்

இந்த பாடல்கள் எல்லாம் எனக்கும் பிடிக்கும்

அழகு மலராட அபிநயங்கள் கூட - வைதேகி காத்திருந்தாள்...இந்த பாடல் இப்போதும் பள்ளி ஆண்டு விழாவில் போடுவார்கள்

Sriakila said...

நன்றி தமிழ் அமுதன்!

நன்றி ப்ரியா!

வருகைக்கு நன்றி பழனி சார்!

நன்றி ஜெயந்த்!

நன்றி மகராஜன்!

நன்றி தமிழ் உதயம்!

நன்றி அன்பரசன்!

நன்றி பாலாஜி!

நன்றி செளந்தர்!

Mathi said...

nice songs !! i love that punnagai mannan song very much..

siva said...

good all very nice songs..

siva said...

good all very nice songs..

நிலாமதி said...

அத்தனயும் முத்தான் பாடல்கள். இனிய புது வருடம் பிறக்க வாழ்த்துக்கள்.