Thursday, 20 January, 2011

வாழ்க்கைப் பாடம்!

சிறுவயதில் அம்மா ஆக்ரோஷமாக அடித்துத் திட்டும்போது
நினைத்துக் கொண்டேன்
அம்மா கோபப்படும்போது அசிங்கமாக இருக்கிறாள்
நான் அப்படி இருக்க மாட்டேன்
எல்லாரிடமும் பொறுமையாகப் பேசி அழகாக இருப்பேன் என்று.

சிறுவயதில் அண்ணன் அடித்தவுடன் 
வலி தாங்காமால் அழும்போது நினைத்துக் கொண்டேன்
யாரையும் இப்படி அடிக்கக் கூடாது அவர்களுக்கும் 
இவ்வளவு வலிக்குமே என்று.


கொஞ்சம் வளர்ந்தவுடன் ஏதோ ஒரு நேரத்தில் 
அப்பாவும், அம்மாவும் சண்டைபோட்டு 
வார்த்தைகளை வீசி வருந்தும் போது 
மனதில் நினைத்துக் கொண்டேன்
யாரிடமும் காயப்படுத்தும் வார்த்தைகளைப் 
பேசக்கூடாது என்று.


படிக்கும் வயதில் சாப்பாடு பிடிக்கவில்லை என்று 
டிபன் பாக்ஸில் உள்ளதை மொத்தமாகக் கொட்டிவிட்டு 
மெத்தனமாக திரும்பி வரும்போது
யாரோ "அம்மா, சாப்பிட்டு மூணு நாளாச்சு..
ஏதாச்சும் தர்மம் பண்ணும்மா" என்று சொல்வது 
காதில் விழ அப்போதே மனதில் நினைத்துக் கொண்டேன்
சே! இந்த சாப்பாட்டை வீணாக்குவது 
எவ்வளவு தவறு என்று.


அவசரத்தில் ஒரு பேனா, பென்சிலைக் கூட 
சக தோழிகளுக்குத் தர மனமில்லாமல் 
உதாசீனப்படுத்தும் மற்ற தோழிகளைப் பார்த்து
மனதில் நினைத்துக் கொண்டேன்
நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்குக் 
கொடுக்க வேண்டும் என்று.


யாராவது ஒருவரைப் பற்றி குறை சொல்லிப் 
புலம்புவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு 
அதை அவர்களிடமே எடக்குமடக்காகப் போட்டுக்கொடுத்து மாட்டிவிடும் 
என் கணவரைப் பார்த்து மனதில் நினைத்துக் கொண்டேன்
யாரைப்பற்றியும் குறை சொல்லக்கூடாது என்று.


கெட்ட வார்த்தை பேசுவதால் கடுமையாகக் கண்டித்து விட்டு வருத்தப்படும்போது இனி அப்படி பேச மாட்டேன்மா 
என்று உடனே கோபத்தை மறந்து கட்டிக்கொள்ளும்
குழந்தையின் இயல்பைப் பார்த்து 
மனதில் நினைத்துக் கொண்டேன்
யாருடையக் கோபத்தையும் உடனே மறந்து விடும்
இந்த குழந்தை மனதுடன் இருக்க வேண்டும் என்று.
நான் வாழ்க்கையில் பக்குவப்பட 
இத்தனை பேர் உதவியிருக்கிறார்களே
என்று ஆச்சர்யப்படும் வேளையில்
நான் வாழ்நாள் முழுவதும் பக்குவப்பட 
இன்னும் எத்தனைப் பேரை
சந்திப்பேன்? காத்திருக்கிறேன் ஆவலுடன்!24 comments:

Chitra said...

That is so sweet! Very nice post. :-)

எல் கே said...

நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஆசான்

தமிழ் உதயம் said...

உண்மை தான். பக்குவப்பட ஏராளமான நிகழ்ச்சிகள் உள்ளன.

யாதவன் said...

தனித்துவமான படைப்புhttp://kavikilavan.blogspot.com/

Balaji saravana said...

ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொன்றை கற்றுக் கொள்கிறோம்! இந்தப் பதிவின் மூலம் அனைத்தும்! :)

சௌந்தர் said...

வாழ்கையே ஒரு பாடம் அதை அனுபவமாக எடுத்து கொள்ளவேண்டும்

Priya said...

மிகவும் அருமையான பதிவு இது!

வெறும்பய said...

ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு பாடங்கள் தான்...

தமிழ் அமுதன் said...

அனைவரையும் யோசித்து பார்க்க வைக்கும் நல்ல ஒரு பதிவு..!

டக்கால்டி said...

simply super...

goma said...

ஸ்ரீஅகிலா
உங்கள் ஆசான்களை எல்லாம் அழகாக அறிமுகப் ப்டுத்தியிருக்கிறீர்கள்.அருமை

நல்ல மாணவி.வாழ்க்கை எனும் பள்ளியிலே நாம் என்றென்றும் மாணவிகள்தான்.

சிவகுமாரன் said...

பக்குவமடைந்த மனதில் உதித்த வார்த்தைகளின் வெளிப்பாடு இந்தக் கவிதை.

சே.குமார் said...

பக்குவமடைந்த மனதின் தனித்துவமான படைப்பு.

ஹேமா said...

அகிலா...நல்லதொரு பதிவு.வயது போகப்போக மனம் பக்குவப்படுகிறது.
பழைய தப்பையெல்லாம் திருத்திக்கொள்கிறது !

Jagannathan said...

//...
அதை அவர்களிடமே எடக்குமடக்காகப் போட்டுக்கொடுத்து மாட்டிவிடும்
என் கணவரைப் பார்த்து மனதில் நினைத்துக் கொண்டேன்
யாரைப்பற்றியும் குறை சொல்லக்கூடாது என்று.//

சரியாக சொன்னீர்கள். எனக்கும் தெரியும். இனி நானும் செய்யமாட்டேன்.

போளூர் தயாநிதி said...

மிகவும் அருமையான பதிவு இது!

மாணவன் said...

நல்லாருக்குங்க சகோ சிறப்பா எழுதியிருக்கீங்க...

வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்க....

Sriakila said...

நன்றி சித்ரா!

நன்றி எல்.கே!

நன்றி தமிழ் உதயம்!

நன்றி யாதவன்!

நன்றி பாலாஜி!

நன்றி செளந்தர்!

நன்றி ப்ரியா!

நன்றி ஜெயந்த்!

நன்றி தமிழ் அமுதன்!

வருகைக்கு நன்றி டக்கால்டி!

வருகைக்கு நன்றி கோமா!

வருகைக்கு நன்றி சிவகுமாரன்!

நன்றி குமார்!

நன்றி ஹேமா!

வருகைக்கு நன்றி ஜெகன்! (என்ன ஆச்சு?)

வருகைக்கு நன்றி போளூர் தயாநிதி!

வருகைக்கு நன்றி மாணவன்!

Lakshmi said...

நீங்க பக்குவப்பட இவ்வளவுபேரு காரணமா இருந்திருப்பதைப்போல நம்மைப்பார்த்தும் பலர் பக்குவப்படும்படி நாமும் நடந்து கொள்ளலாமே.

Thanglish Payan said...

Experience makes man perfect !!!

Very nice ..

Sriakila said...

வருகைக்கு நன்றி லஷ்மி அம்மா!

வருகைக்கு நன்றி Thanglish Payan!

siva said...

அக்கா எந்த போஸ்ட் ரொம்ப ஸ்வீட் நல்ல இருக்கு
எத்துனை அழகான அனுபவங்கள்
எல்லாம் பாசிட்டிவாக ....
அருமை

கே. ஆர்.விஜயன் said...

உங்களுடைய மனதில் மேம்படுத்தும் திறன்(updation) இருக்கிறது. அது எல்லோருக்கும் இருப்பதில்லை. அதுவே உங்களை நல்ல விஷயங்களை விரும்ப நல்லவனாக/ளாக வாழ வழி செய்கிறது. ஆனால் எல்லோருக்கும் இயற்க்கையான குணம் ஒன்று உண்டு.அதை மாற்றுதல் அரிது. எப்படியாவது அதி வெளிப்பட்டே தீரும்.உங்களால் எல்லா விஷயங்களையும் உள்வாங்கி உங்கள் குறைகளை நிரந்தரமாக மாற்றமுடிகிறது என்றால் அது பெரிய விஷயம்தான்.

raji said...

தங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.நேரமிருக்கும் போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_22.html