Tuesday, 15 February, 2011

தீரவில்லையா ஆண்பிள்ளை மோகம்!


சமீபத்தில் சிநேகிதி ஒருவரிடம் தொலைபேசியில் பேசினேன். அவ‌ருக்கு இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்து ஒரு வருடம்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் அவரின் இருவீட்டுக் குடும்பத்தாரும் சேர்ந்து ஆண்பிள்ளை வேண்டும் என்ற ஆசையால் தொந்தரவு செய்வதை என்னிடம் தொலைபேசியில் சொன்னார்.


இரண்டாவது சிசேரியன் செய்யும்போதே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனையும் சேர்த்து செய்திருக்கலாமே என்று கேட்டேன். ஆனால் அவர், அதற்கு குடும்பத்தார் யாரும் சம்மதிக்கவில்லை என்று வருத்தப்பட்டார். இப்போதே இரண்டு பெண்குழந்தைகள் ஆகிவிட்டது. இவர்களை வள்ர்ப்பதற்கே எனக்கு நேரம் சரியாக இருக்கும். இன்னும் 'ஆண்பிள்ளை' ஆசையை சொல்லி வேறு தொந்தரவு செய்கிறார்கள். இவர்களை எதுவும் செய்யமுடியாமல் நான் 
தவிக்கிறேன் என்று சொன்னார்.


இப்போதே ஜனத்தொகை நூறு கோடியை எட்டிவிட்ட நிலையில் ஆண்பிள்ளை மோகம் இன்னும் தீராமல் இருப்பதை நினைத்து வருந்துகிறேன். ஆண்பிள்ளை பிறந்தால் எதை அடைந்து விடுகிறார்கள்? பெண்பிள்ளை பிறப்பதால் எதை இழந்துவிடுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.


ஒரு குடும்பத்தில் முதலில் பிறப்பது ஆணாக இருக்க வேண்டும் என்றுதான் பொதுவாக பலரும் நினைக்கிறார்கள். அது பெண்ணாக பிறக்கும்போது அடுத்தது ஆணாக இருக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. அனைவருக்கும் ஆண் ஒன்று, பெண் ஒன்று இருக்க வேண்டும் என்று ஆசைதான். அது அமையாமல் போனால் ஏன் வருத்தப்படுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. அதில் சின்ன சலிப்பும் கூட தொற்றிக்கொள்கிறது.


ஆண்பிள்ளை என்றால் வரவு, பெண்பிள்ளை என்றால் செலவு என்ற காலமெல்லாம் முந்தைய தலைமுறையோடு போய்விட்டது. இன்று நாட்டில் இருக்கும் விலைவாசியில் ஆண், பெண் பாகுபாடில்லாமல் தான் செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. என்னைப்போலவே என்னுடைய பெண்ணும் கஷ்டப்பட வேண்டாம் என்றுதான் பல தாய்மார்கள் நினைக்கிறார்கள். அந்தக் கஷ்டத்தை நம்மைவிட பலமடங்கு சக்தியுடன் எதிர்கொள்ள பழக்கப்படுத்துவது தான் பெற்றோர்களின் கடமை.


படுத்த படுக்கையாகிவிடும் கடைசிக்காலத்தில் (நிர்வாணக் கோலத்தில் கிடந்தால் கூட) நம் தாய், தந்தை, மாமனார், மாமியார் என்று அனைவரையும் அரவணைக்கும் பக்குவம் ஒரு பெண்ணுக்கு இயற்கையாகவே வந்துவிடும். இந்த மன‌நிலை ஆணுக்கு வருவது கடினம். அதையும் மீறி அவர்கள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு அவனுடைய மனைவியோ, அக்காவோ, தங்கையோ அவ‌ர்களின் துணை தேவை. இது தெரியாமல் பல பெற்றோர்கள் என் பிள்ளை வந்து கொள்ளி வைத்தால் தான் என்கட்டை வேகும் என்று புலம்புவார்கள்.


அந்த புலம்பல்களுக்குப் பின்னால் கண்டிப்பாக ஒரு பெண்ணின் அரவணைப்பு இருக்கும். அது மகளாகவோ, மருமகளாகவோ, பேத்தியாகவோ அல்லது ஒரு நர்ஸாகவோ கூட இருக்கலாம்.  


அந்த அரவணைப்பைத் தரும் பெண்பிள்ளையை பெற்றெடுத்ததற்காக சந்தோஷ‌ப்படுங்கள். என்னைப் பொறுத்தவரை, ஒரு பெண்குழந்தையை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள், இரண்டு பெண்குழந்தைகளை பெற்றவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.


ஆண்குழந்தைகளை வரவேற்போம்! 
பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்போம்! 
பெண்குழந்தைகளையும் வரவேற்று 
பெண்ணை பெற்றெடுத்ததற்கு பெருமைப்படுவோம்!

20 comments:

S Maharajan said...

//பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்போம்!
பெண்குழந்தைகளையும் வரவேற்று
பெண்ணை பெற்றெடுத்ததற்கு பெருமைப்படுவோம்!//

சமுக அக்கறையுள்ள
நல்ல பதிவு

சமுத்ரா said...

well said ..
ஆனாலும் இரண்டாவதும் பெண் பிறந்து விட்டால் சில பேர் உடைந்து தான் போகிறார்கள்..
தந்தை வழி சமூகத்தில் இது இயற்கை தான்..

'பரிவை' சே.குமார் said...

சமுக அக்கறையுள்ள பதிவு.

தமிழ் உதயம் said...

அழகாக முடித்துள்ளீர்கள். மிக மிக அவசியமான கட்டுரை.

Unknown said...

ஆண்-பெண் பிள்ளைகளுக்கு அவரவர்க்கான குணாதிசயங்கள் உண்டு. எப்படி பார்த்தாலும் ஆண் குழந்தை கடைசி வரை கூட பாதுகாப்பாக இருந்து உதவுவதை அதிகமாக காண முடிகிறது. மேலும் பெண் குழந்தை கல்யாணம் ஆகி வேறுவீட்டிற்க்கு போய்விடும். எந்த பிள்ளையாக இருந்தாலும் நல்ல,பாசமான பிள்ளையாக இருந்தால் பெற்றோர் குடுத்து வைத்தவர்கள். ஒரு பேச்சுக்கும் கணவர் முதலில் இறந்துவிட்டால் மகளின் வீட்டில் இருக்க விரும்புவதில்லை. மகனுக்கும் மருமகனுக்கும் வேறுபாடு இருக்கிறது. அதனால் ஆணோ,பெண்ணோ நல்ல குணத்தோடு இருந்தால்தான் பயன். அது ஒரு ஆண் ஒரு பெண் என்றால் கொடுத்து வைத்தவர்கள். இரண்டு பெண் என்றால் கொஞ்சம் அதிகம் பணசுமை இருக்காலாம். இரு ஆண் என்றால் சாகும்வரை பெரிய தலைவலி தான்.

பொன் மாலை பொழுது said...

உங்களின் கட்டுரையில் கூட ஆணும் பெண்ணும் சமம் என்ற உணர்வினை காண இயலவில்லையே? இந்த உணர்வு வந்து, அது நிலைத்து விட்டால் இது போன்ற குழப்பங்களுக்கு வேலை இல்லை.
தனிமனிதரிடம் இல்லாத ஒன்று ஒரு சமூகத்தில் இருக்க வாய்ப்பில்லை அம்மா.

அம்பிகா said...

இந்த ஆண்பிள்ளை மோகம் குறையவே குறையாது போலும். ஒரு ஆண்குழந்தைக்காக அடுக்கடுக்காக நான்கு பெண்குழந்தை பெற்றுக் கொண்ட தம்பதிகளை என்னசொல்வது? இருவருமே படித்தவர்கள் தாம். அதிலும் அந்த பெண்மணி ஒரு போஸ்ட் கிராஜூவேட்.

நல்ல பகிர்வு அகிலா.

Chitra said...

ஆண்குழந்தைகளை வரவேற்போம்!
பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்போம்!
பெண்குழந்தைகளையும் வரவேற்று
பெண்ணை பெற்றெடுத்ததற்கு பெருமைப்படுவோம்!


......வரதட்சணை கொடுமைகளும் பெண் குழந்தைகளை பெற்று விட்டு, நெருப்பை மடியில் கட்டி இருப்பதை போல, அவர்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் - சிலர் காரணங்களாக சொல்கிறார்கள். ஆண் குழந்தையோ - பெண் குழந்தையோ - இறைவன் கொடுத்த ஆசிர்வாதம் என்று எண்ணும் அளவுக்கு சமூதாயம் மாற்றி கொள்ள வகை செய்ய வேண்டும்.

Unknown said...

ஆணோ பெண்ணோ அவை நம் குழந்தைகள்..

சாந்தி மாரியப்பன் said...

எதுவா இருந்தாலும் நம்ம குழந்தைதானே..

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

உங்களில் ஒருவன் said...

அருமையான கட்டுரை, நல்ல கருத்துக்கள். இரண்டு பெண் பிள்ளைகள் பெற்றால் மிகவும் பாக்கியம் சரிதான்.
நான் சிந்திக்கிறேன் ஆண்பிள்ளை பெற்று அதை வளர்த்து யப்பா பெரிய பிரச்சினை..நீங்கள் சொல்வது சரிதான்

நிலாமதி said...

தற்காலத்தில் ஆணும் பெண்ணும் சம்ம்மே ............இந்த வரட்டு பிடிவாதங்கள். மாறவேண்டும்.

இப்டிதான் ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைகள் தந்தை இறந்துவிட அந்த பெண் குழந்தை வெளிநாட்டுக்கு வந்து படித்து ( மாமா உதவியுடன் ) உழைத்து தாயையும் ச்கொத்ரியைம் தன்னிடம் அழைத்துக் கொண்டார்........ மனங்கள் மாறவேண்டும். எழுத்தாளர்களால் முடியும்.

போளூர் தயாநிதி said...

நல்ல பாராட்டவேண்டிய சிந்தனை . இன்றைய சமூக சூழலை அழகாக படம் பிடிக்கின்றீர் அனாலும் இந்த ஏக்கங்களுக்கு உண்மையில் இந்த சமூக அமைப்பு மரபு வழியாக இப்படித்தான் வந்தது என்று போலியாக கற்பிக்கப்பட்டு வருகிறது முன்பு உலகு தாய்வழி குமுகமாக இருந்ததை வரலாறுகள் கட்டுகிறது . இதற்க்கு நல்ல அறிவு சார்ந்த உம்மை போன்ற வர்கத்தான் முன்னோடியாக இருந்து இதை மாற்றிகட்ட செய்ய வேண்டும் . இது தொடக்கம் தன் ஆனாலும் விரைந்து செய்ய வேண்டிய பணி நன்றிகள்

Pranavam Ravikumar said...

Good topic selected.. But don't know how far today we prefer boy to girl. Both are same..

Sriakila said...

நன்றி மகாராஜன்!

வருகைக்கு நன்றி சமுத்ரா!

நன்றி குமார்!
நன்றி தமிழ் உதயம்!

நன்றி கே.ஆர்.விஜயன்!

நன்றி க்க்கு‍ மாணிக்கம்!
ஆணும், பெண்ணும் சமம்தான்! நான் சொல்வது ஆண் குழந்தையை ஏற்றுக்கொள்ளும் மனதுக்கு பெண் குழந்தையை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லையே..ஏன் என்றுதான் கேட்கிறேன். அந்த எண்ணம் தேவையில்லாதது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

நன்றி அம்பிகா அக்கா!

நன்றி சித்ரா!

வருகைக்கு நன்றி கே.ஆர்.பி. செந்தில்!

நன்றி அமைதிச்சாரல்!

வருகைக்கு நன்றி ரத்னவேல்!

வருகைக்கு நன்றி உங்களில் ஒருவன்!


வருகைக்கு நன்றி நிலாமதி!


வருகைக்கு நன்றி போளூர் தயாநிதி!

Sriakila said...

Thanks Pranavam Ravikumar!

சிவகுமாரன் said...

நானெல்லாம் பெண்பிள்ளை இல்லையே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு.

இதே கருத்துடனான எனது பதிவு இங்கே.

Jaleela Kamal said...

மிகச்சரியான இடுகை தோழி

ஆண் பிள்ளை மோகம் இன்னும் விடவில்லைதான், பொண்ணா இருந்தா கல்யாணம் பண்ணிட்டு போய்விடுவா
ஆணா இருந்தா கூட இருந்து கஞ்சி ஊத்துவான்னு சொல்லுவாஙக் ஆனால் அந்த காலம் மலையேறி விட்டது,

பெண் ஆண் எல்லாம் ஒரே செலவு தான் இந்த காலத்தில் , ஆனால் பெண் பிள்ளைகல் தான் பெற்றோர்களை கவனிக்கிறார்கள்,