Saturday 19 March, 2011

எல்லா நாளும் நல்ல நாளே!


அதென்ன நல்ல நேரம், கெட்ட நேரம், நல்ல நாள், கெட்ட நாள்? அப்புறம் எதற்கு வாரத்திற்கு 7 நாட்கள், ஒருநாள் என்பது 24 மணி நேரம் என்றெல்லாம் வரையறுத்து வைத்தார்கள். நமக்கு எது நல்ல நாள், கெட்ட நாள் என்று அவர்களைத்தான் முதலில் கேட்க வேண்டும். 


உலகில் நடக்கும் அத்தனை நல்லவையும் எமகண்டம் என்று சொல்லப்படும் கெட்டநேரத்திலும் நடக்கிறது..அத்தனை கெட்டவையும் ஜோசியர் குறித்துக் கொடுக்கும் முகூர்த்த நேரத்திலும் நடக்கிறது. இது இயற்கைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 


எத்தனையோ கெட்ட விஷயங்களிலிருந்து தான் ஏதோ ஒரு நல்ல விஷயம் பிறக்கிறது. அப்படியென்றால் அந்த கெட்டது நடக்கும் நாளும் உலகத்துக்கு எச்சரிக்கையாக மாறும் நல்ல நேரம்தானே!


'செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது என்று நினைத்து உருவாக்கப்பட்ட 'நல்ல நேரம், கெட்ட நேரம்' என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன.


இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின் படி, ஒரு மாதத்துக்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு தலைதான் சுற்றுகிறது.


வாரத்தில் செவ்வாய், சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்).


மாதத்தின் அஷ்டமி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4 நாட்கள்).


'பாட்டி முகம்' நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).


ஒரு மாதத்தில் வரும் ராகுகாலம், எமகண்டம், குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 3/4 நாட்கள்).


தவிர, கெளரி பஞ்சாக்கத்தின் படி நன்மை செய்யத் தகாத நாட்கள் (2 நாட்கள்).


மொத்தத்தில் ஒரு மாதத்தின் 21 3/4 நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட?

(நன்றி: விகடன்)

12 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்ல கருத்துக்களை பகிர்ந்தமைக்கு
நன்றி ஸ்ரீஅகிலா.

jothi said...

Super

padma138 said...

அஷ்டமி நவமி திதியில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாதென்றால் கோகுலாஷ்டமி ஸ்ரீராமநவமி கொண்டாதுவதேன்
சகாதேவன்

Deepa said...

Super!

தமிழ் உதயம் said...

எல்லா நாளும் நல்ல நாளே. எல்லா நேரமும் நல்ல நேரமே.

ம.தி.சுதா said...

////மொத்தத்தில் ஒரு மாதத்தின் 21 3/4 நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட?////

ஹ...ஹ..ஹ..

நன்றாக சிந்திக்க வைக்குதுங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

சிவகுமாரன் said...

உருப்படறதுக்கு வழியை சொன்னீங்க

சௌந்தர் said...

இதையெல்லாம் சொன்னா யார் கேக்குறாங்க .....

Yaathoramani.blogspot.com said...

சுருக்கமாக நல்ல செய்தியைத் தந்தமைக்கு
வாழ்த்துக்கள் நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Sriakila said...

வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

ஹேமா said...

எல்லாத்துக்கும் நேரகாலம் பாக்கிறவங்க இந்தப் பதிவைப் பாக்கணுமே !

போளூர் தயாநிதி said...

நல்ல கருத்துக்களை பகிர்ந்தமைக்கு
நன்றி
எல்லா நாளும் நல்ல நாளே. எல்லா நேரமும் நல்ல நேரமே.